மும்பையில் கட்டுப்பாடற்ற பகுதிகளில் ஆன்லைன் மூலம் மது விற்பனை

0 367

மும்பையில் கட்டுப்பாடற்ற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் ஆன்லைனில் மதுபானங்களை விற்பது தொடங்கியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் இக்பால் சிங் சாஹர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களைத் தவிர்த்து, மற்ற பகுதிகளில் இ காமர்ஸ் முறையில் வாடிக்கையாளர்கள் மதுபானங்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் கூறிய அவர், மதுபானங்களை வாங்குவோர் குறித்து மாநில கலால் துறை அதிகாரிகளும், மும்பை வார்டு அதிகாரிகளும் கண்காணிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மதுபான விற்பனையில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments