சென்னை தவிர தமிழகத்தின் பிறபகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு அனுமதி

0 3065
சென்னை தவிர்த்து, தமிழகத்தின் நகர்ப்புறங்களிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகுநிலையங்களை திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தவிர்த்து, தமிழகத்தின் நகர்ப்புறங்களிலும் நாளை முதல் சலூன் கடைகள், அழகுநிலையங்களை திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது, சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் நாளை முதல் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

நாளை முதல் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதி கிடையாது. தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து பணிக்கு வருகின்ற முடிதிருத்தும் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.

இந்த முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். பணியாளர்களுக்கோ அல்லது வருகின்ற வாடிக்கையாளர்களுக்கோ காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிலையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிருமிநாசினி கண்டிப்பாக வழங்குவதையும், முககவசங்கள் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும், வாடிக்கையாளர்களும், பணியாளர்களும் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்ய வேண்டும், குளிர்சாதன வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்களை இயக்குவதற்கான விரிவான வழிமுறைகளை தனியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments