புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா..ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலத்திற்கு மாறியது புதுச்சேரி

0 1604

புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில்,  ஆரஞ்சு மண்டலமாக இருந்த புதுச்சேரி தற்போது சிவப்பு மண்டலத்திற்கு மாறியுள்ளது.

அங்கு ஏற்கனவே 17 பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருந்த நிலையில், சென்னையில் இருந்து திரும்பிய ரெட்டியார்பாளையம் மற்றும் பெரியகாலாபட்டு பகுதிகளை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் சிகிச்சைக்காக கதிர்கிராமம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் 35 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 13 பேர் குணமடைந்துள்ளனர், மீதமுள்ள 22 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments