வியர்வை வாசனை மூலம் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி

0 904

வியர்வையில் இருந்து வரும் வாசனையை வைத்து கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறியும் வகையில் பிரான்சில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆல்போர்ட் தேசிய கால்நடை பயிற்சி பள்ளியில், கொரோனா நோயாளி, நோய் தொற்று இல்லாத நபரின் வியர்வை மாதிரி நாய்களுக்கு அளிக்கப்படுகிறது. அதில் கொரோனா நோயாளியின் வியர்வையை சரியாக கண்டறியும் நாய்களுக்கு பொம்மை பரிசாக வழங்கப்படுகிறது.

கொரோனா நோயாளியின் வியர்வையில் இருந்து வரும் தனித்துவமான வாசனை மூலம் நோய் தொற்றை உறுதி செய்வதில் 86 சதவீத வெற்றியடைந்துள்ளதாகவும், இந்த பரிசோதனை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது என்றும் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் டொமினிக் கிராண்ட்ஜீன் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments