”கொரோனா தாக்கத்தால் உலகளவில் 6 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர்” - உலக வங்கி

0 1134
”கொரோனா தாக்கத்தால் உலகளவில் 6 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர்” - உலக வங்கி

கொரோனா தாக்கத்தால் உலகளவில் ஆறு கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்' என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, பேசியிருக்கும் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ், வறுமையை ஒழிப்பதில் போராடி கிடைத்த முன்னேற்றத்தை இது வீணாக்கிவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக உலக வங்கி நிதியுதவி வழங்கி வருகிறது.

அந்த வகையில், 100 வளரும் நாடுகளுக்கு அடுத்த 15 மாதங்களில், 12 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மொத்த நிதி உதவியில், மூன்றில் ஒரு பங்கு உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன், சாத், ஹைதி, நைஜர் உள்ளிட்ட நாடுகளுக்கு தரப்படும் என்றும் வளரும் நாடுகள் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே உலக வங்கியின் முக்கிய நோக்கம் என்றும் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments