தொழிலாளர்களை அழைத்து வருவதில் அரசியல் வேண்டாம், அவர்களைப் பேருந்துகளில் ஏற்றி வர அனுமதிக்க வேண்டும் என்று உ.பி முதலமைச்சருக்கு பிரியங்கா வேண்டுகோள்

0 873

தொழிலாளர்களை அழைத்து வருவதில் அரசியல் வேண்டாம் என்றும், அவர்களைப் பேருந்துகளில் ஏற்றி வர அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்குப் பிரியங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிமாநிலங்களில் இருந்து உத்தரப்பிரதேச எல்லைக்கு வந்துள்ள தொழிலாளர்களை அழைத்து வர காங்கிரஸ் சார்பில் ஆயிரம் பேருந்துகளை அனுப்புவதாக பிரியங்கா அறிவித்தார். ராஜஸ்தான் எல்லைக்குப் பேருந்துகள் சென்ற நிலையில், 879 பேருந்துகளே உள்ளதாகக் கூறித் தொழிலாளர்களை ஏற்றிவர அனுமதிக்க மாநில அரசு மறுத்துள்ளது.

இந்நிலையில் காணொலியில் பேசியுள்ள பிரியங்கா, அரசியல் செய்ய இது நேரமல்ல என்றும், அனைத்துக் கட்சிகளும் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments