கட்டுக்குள் வரும் கொரோனா 34 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

0 2283
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34 ஆயிரம் பேர் குணம் அடைந்து , டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டி விட்டது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 34 ஆயிரம் பேர் குணம் அடைந்து , டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.  

கொரோனாவுக்கு எதிரான போரில், மருத்துவ துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் களத்தில் நின்று, ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

மஹாராஷ்டிராவில் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 347 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தை
தாண்டி விட்டது.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்44 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில், 2 வது இடம் வகிக்கும் குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் 11 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

டெல்லியை பொறுத்தவரை, 9 ஆயிரத்து 700 ஐ தாண்ட, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் தெலங்கானாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கர்நாடகா , ஜம்மு - காஷ்மீர் , பீஹார் , ஹரியானா , ஒடிசா மற்றும் கேரளாவிலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், 14 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட , ஒரே நாளில் 120 பேர் வைரஸ் தொற்றுக்கு இரை ஆகி உள்ளனர்.

53 ஆயிரத்து 946 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 34 ஆயிரத்து 109 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments