ராணுவத்தினர் மீது போராளிக் குழுவினர் திடீர் துப்பாக்கிச் சூடு

0 2607

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தினர் மீது போராளிக் குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

என் எஸ் சி என் எனப்படும் நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில் அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆயுதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் நடமாடுவதாக வந்த தகவலையடுத்து லாங்கிங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு என் எஸ் சி என் அமைப்பினர் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் கிராமவாசி ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து ராணுவத்தினரின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போராளிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments