நீரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி: ரவிசங்கர் பிரசாத்

0 2297

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிரமாக முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, லண்டன் தப்பிச்சென்ற நீரவ் மோடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் காணொலி மூலம் அளித்த பேட்டியில், மும்பை மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதியும், காங்கிரசை சேர்ந்தவருமான அபய் திப்சே, நீரவ் மோடி தரப்பு சாட்சியாக சாட்சியம் அளித்துள்ளதாக கூறினார்.

தனிப்பட்ட முறையில் அவர் இவ்வாறு செயல்பட்டதாக கூற முடியாது எனவும், காங்கிரசின் கட்டளைப்படியே செயல்பட்டுள்ளார் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments