இந்திய ராணுவத்தின் சிறப்புமிக்க 61வது குதிரை படையினர் ஆயுதப்பிரிவுக்கு மாற்றம்?

0 1504

இந்திய ராணுவத்தின் சிறப்புமிக்க 61வது குதிரைப் படையை பீரங்கிகளுடன் கூடிய ஆயுதப்படைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

300 குதிரைகளுடன் கூடிய வீரர்கள் இதுவரை போலோ போன்ற விளையாட்டுகளிலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், அணிவகுப்புகளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் குதிரைப்படை ஆயுதப்படையாக மாற்றப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குதிரைகளை டெல்லிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்தக் குழு குதிரைப்படையினர் மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யும் என்றும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பத்மஸ்ரீ, 10 அர்ஜுனா விருதுகள், ஆசிய விளையாட்டு போட்டியில் 11 பதக்கங்கள், போலோ உலகக் கோப்பை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 61வது குதிரைப்படை பங்கேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments