சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்

0 1436

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு படையெடுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் செல்வதற்கு nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். இதனை அறியாத வடமாநில தொழிலாளர்கள் பலரும் நேரடியாக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்துவிடுவதால், அங்கு கூட்டம் கூடி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகிறது.

அந்த வகையில் அசாம் மாநிலத்திற்கு சிறப்பு ரயில் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து அம்மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் சென்ட்ரல் பகுதியில் கூடிய நிலையில், போலீசார் அவர்களை பேருந்து மூலம் அழைத்து வந்து வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தங்க வைத்தனர்.

அதே போல் பள்ளிக்கரணையில் உள்ள ஒடிசா பவன், அசாம் பவன் முகாம்களில் போதிய இட வசதி இல்லாமல் சாலையோரம், வாகனங்களுக்கு அடியில், மர நிழல்களில் தஞ்சமடைந்துள்ள தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments