வீட்டில் இருந்தவாறே வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி

0 6317

ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், அஞ்சல் துறை மூலம் அவர்களது வீடுகளுக்கே சென்று சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கால் வெளியே செல்ல முடியாதோர் வீடுகளில் இருந்தபடியே தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் பெற்றுக்கொள்ளும் வகையில் Aadhar Enabled Payment system என்ற திட்டத்தை அஞ்சல் துறை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் படி, பணம் தேவைப்படுவோர் உதவி எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தால், தபால் ஊழியர் மூலம் வீடு தேடி பணம் வழங்கப்படும்.

இந்த சேவை மூலம் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 274 கோடி ரூபாயும், பீகாரில் 101 கோடி ரூபாயும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments