டெஸ்லா கார் தொழிற்சாலையைத் திறக்க அனுமதிக்குமாறு உள்ளூர் நிர்வாகத்துக்கு டிரம்ப் வேண்டுகோள்

0 800

டெஸ்லா கார் தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என கலிபோர்னிய மாநில அரசை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு  உள்ள நிலையில் கலிபோர்னியாவின் பிரீமான்டில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையைத் திறந்து உற்பத்தியைத் தொடங்கப்போவதாக அதன் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்தார்.

ஒருவாரம் கழித்து நிலைமையை ஆய்வு செய்த பின்னரே அனுமதி அளிப்பது பற்றிப் பரிசீலிக்க முடியும் என அலமேடா கவுன்டி நிர்வாகம் தெரிவித்தது. மீறித் தொழிற்சாலையைத் திறந்தால் எலோன் மஸ்க் கைது செய்யப்படுவார் என எச்சரித்தது.

 இந்நிலையில் எலோன் மஸ்குக்கு ஆதரவாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், டெஸ்லா தொழிற்சாலையைத் திறக்க கலிபோர்னிய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இது விரைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments