என்று தணியும் கொரோனா பாதிப்பு ? உயரும் உயிர்ப்பலியால் உலக நாடுகள் திணறல்

0 1560

உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து சுமார் 16 லட்சம் பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். ரஷியாவில் 11 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுவது, 9 - வது நாளாக நீடித்துள்ளது.  

அமெரிக்காவில், கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 300 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 8 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு, ஒரே நாளில் 1500 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 83 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ரஷியாவில் ஒரே நாளில் 11 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 2 ஆயிரத்தை தாண்டி விட்டது. 10 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்படுவது, ரஷியாவில் இது 9 வது நாளாகும்.

இங்கிலாந்தில் ஒரே நாளில் 627 பேர் பலி ஆனதால் உயிரிழப்பு 32 ஆயிரத்து 600ஐ தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 400 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.இத்தாலியில் உயிரிழப்பு 30 ஆயிரத்து 900 ஐ தாண்ட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் ஒரே நாளில் ஆயிரத்து 370 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 69 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 176 பேர் உயிரிழந்ததால், கொரோனாவுக்கு இரை ஆனோர்
26 ஆயிரத்து 900 ஐ தாண்டி உள்ளது.

பிரான்சில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 900 ஐ தாண்டிவிட்டது.பிரேசிலில் ஒரே நாளில் 779 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 500 ஐ எட்டி உள்ளது.

பெல்ஜியத்தில் உயிரிழப்பு 8 ஆயிரத்து 700 ஐ தாண்டிவிட்டது.பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 607 பேரும், சிலியில் ஆயிரத்து 197 பேரும், பெலாரஸில் 933 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு 2 லட்சத்து 92 ஆயிரத்து 335 ஆக உயர, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 42 ஆயிரத்து 335 ஐ எட்டி உள்ளது.சுமார் 47 ஆயிரம் பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்க, 16 லட்சத்து 2 ஆயிரத்து 441 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments