வெளிநாடுகளில் இருந்து மீட்கப்படும் இந்தியர்கள்..!

0 1891

வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை அழைத்து வந்த விமானங்கள் பல்வேறு முக்கிய விமான நிலையங்களுக்கு வந்து சேர்ந்தன.

லண்டனில் இருந்து இந்தியர்களுடன் வந்த சிறப்பு விமானம் ஒன்று மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்து சேர்ந்தது. இதில் அழைத்து வரப்பட்ட பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே உடல்வெப்பம், சளி மாதிரி உள்ளிட்ட பரிசோதனைகள்  நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 177 இந்தியர்களை ஏற்றி வந்த விமானம் ஒன்று இரவு 10 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கும் பயணிகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. சுங்க அதிகாரிகள் சோதனைக்குப் பின்னர் பயணிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஷார்ஜாவில் இருந்து 180 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த சிறப்பு விமானம் ஒன்று லக்னோ விமான நிலையத்தை நேற்று நள்ளிரவில் அடைந்தது. இங்கு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே உடல் நலப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பயணிகள் தனித்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோன்று 177 பயணிகளுடன் குவைத்தில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்த விமானம் கேரள மாநிலம் கொச்சிக்கும் குவைத்தில் இருந்து 163 பயணிகளை ஏற்றி வந்த விமானம் ஹைதராபாதிற்கும் இரவில் வந்து சேர்ந்தன,

மேலும் பல விமானங்கள் இன்னும் ஏராளமானோரை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, மலேசியாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி அழைத்துவரப்பட்ட 178 பயணிகள் கல்லூரிகள், தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒருவருக்கு மட்டும் காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மீதமுள்ளவர்கள் கல்லூரிகள், தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 178 பேரும், சென்னை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments