சமூகப்பரவலாகி வருகிறதா கொரோனா தொற்று?

0 1650
மூன்றாம் கட்டத்தை எட்டியதா என கண்டறிய ஆய்வு

கொரோனா தொற்று சமூகப் பரவலாகி மூன்றாம் கட்டத்திற்கு சென்றுவிட்டதா என்பதை கண்டறிய இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலை சேர்ந்த குழுவினர் 75 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதமே நடைபெற இருந்த இந்த ஆய்வு, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. ஹாட்ஸ்பாட்களின் அடிப்படையில் 75 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் பட்டியல் விரைவில் வெளியாகும் என்றும் இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய்த் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்பதை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில் தான் சமூகப்பரவலுக்கு சென்று விட்டதாக கருதப்படும்.

தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவுவதற்கான காரணங்கள் ஓரளவுக்கு தெளிவாக தெரிவதால் சமூகப்பரவல் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் மறுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments