கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் : புதிய வழிகாட்டுதல்கள்

0 2991
லேசான அறிகுறிகள் உள்ள கோவிட் நோயாளிகளை, அறிகுறிகள் நீங்கி வீட்டுக்கு அனுப்பும்போது பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லேசான அறிகுறிகள் உள்ள கோவிட் நோயாளிகளை, அறிகுறிகள் நீங்கி வீட்டுக்கு அனுப்பும்போது பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பாக, புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.

லேசான அறிகுறிகள் உள்ள மற்றும் அறிகுறிகள் தெரிவதற்கு முந்தைய நிலையில் உள்ள கோவிட்-19 நோயாளிகளை, 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லை எனில், அறிகுறிகள் தெரியத் தொடங்கிய 10 நாட்கள் கழித்து டிஜ்சார்ஜ் செய்யலாம், அப்படி டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்னர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை.

மிதமான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் எனில், மூன்று நாட்களில் காய்ச்சல் சரியாகிவிட்டால், சுவாச உதவி தேவைப்படவில்லை என்ற நிலையில், அறிகுறிகள் தெரியத் தொடங்கிய 10 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து விடலாம்.

3 நாட்களில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் சரியாகவில்லை எனில், மேலும் சுவாச உதவி தேவைப்படும் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, அறிகுறிகள் சரியான பிறகு, தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆக்சிஜன் செறிவில் பிரச்சனை இல்லை என உறுதியான பிறகே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட இந்த 3 வகையினருக்கும், அறிகுறிகள் நீங்கிய பிறகு, பரிசோதனை இன்றி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், வீட்டில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.

தீவிர அறிகுறிகள் இருப்பவர்கள் முழுமையாக மீண்ட பிறகு, ஒருமுறை பரிசோதனையில் நெகடிவ் என வந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்.

முன்னர் தொடர்ந்து இருமுறை பரிசோதனையில் நெகடிவ் என வந்த பிறகே டிஸ்சார்ஜ் செய்ய முடியும் என இருந்ததை சுகாதாரத்துறை அமைச்சகம் மாற்றியமைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments