பஞ்சு போன்று மெத்தென்று காணப்படும் ஹார்பி இன கழுகு குஞ்சு

0 503

பிரேசிலில் உள்ள பெலா விஸ்டா உயிரியல் மையத்தில் ஹார்பி இன கழுகு குஞ்சு ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 26ந்தேதி பிறந்த இந்த கழுகு குஞ்சு பஞ்சு போன்று மெத்தென்று இருப்பது காண்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்வதாய் உள்ளது. இந்த கழுகு குஞ்சு இங்கு பிறந்த 50வது ஹார்பி இன கழுகு குஞ்சாகும்.

கம்பீர தோற்றம் கொண்ட இந்த வகை கழுகுகள் உலகின் மிகப் பெரிய கழுகு இனங்களில் ஒன்றாகும். மேலும் இந்த கழுகுகள் 10கிலோ எடை வரை வளரக்கூடியது. பெலா விஸ்டா உயிரியல் மையம் வனவிலங்குகள் தங்களின் இயல்பான வாழ்க்கை முறையில் வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கும் மையமாக விளங்குகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments