சென்னையில் கொரோனா பாதித்த கட்டுப்பாட்டுப் பகுதிகள் 445ஆக உயர்வு

0 924
சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 445 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் ஏதேனும் ஒரு பகுதியில் தொற்று ஏற்பட்டால் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுக் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை 445ஆக அதிகரித்துள்ளது.

திருவிக நகர் மண்டலத்தில் 79 இடங்களும், ராயபுரம் மண்டலத்தில் 89 இடங்களும் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ளன. வியாழனன்று 419 ஆக இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை வெள்ளியன்று 445 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments