வேகம் எடுக்கும் கொரோனா உயரும் பாதிப்பு !

0 8480
தமிழ்நாட்டில் இன்று 580 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஒரே நாளில், 580 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 400 ஐ தாண்டி விட்டது. கொரோனாவுக்கு 2 பேர் பலி ஆகி விட்டதால், உயிரிழப்பு 37 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து, பாதிப்புகள் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், ஒரே நாளில், 580 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து
409 ஆக உயர்ந்தது.

வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களில், 3 ஆயிரத்து 822 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 ஆயிரத்து 935 பேர், தனிமை வார்டுகளில் தங்கி இருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். எனவே, இதுவரை, ஆயிரத்து 547 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட வட தமிழகம் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த 56 வயது பெண் ஒருவர், சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல,48 வயது மற்றொரு பெண், சென்னை - ராஜீவ்காந்தி அரசு தலைமை பொது மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இதனால், தமிழகத்தில் கொரோனா உயிர்ப்பலி, 37 ஆக உயர்ந்தது. கொரோனா காவு வாங்கிய 37 பேரில், 23 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு, மதுரை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் தலா 2 பேர் இதுவரை உயிரிழந்தனர்.

வயது வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி, 12 வயதுக்கு உட்பட்டவர்களில் 131 சிறுவர்கள் உள்பட 273 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் ஆயிரத்து 409 பெண்களும், 2 திருநங்கைகளும் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 743 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, ஆண்கள் - 256, பெண்கள் - 137 என மொத்தம் 393 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments