மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய விஷ தன்மைக் கொண்ட பெரிய குளவி கண்டுபிடிப்பு

0 2844

அமெரிக்காவில் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷ தன்மைக் கொண்ட பெரிய குளவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு ஆசியா, சீனா, தைவான் உள்ளிட்ட இடங்களை பூர்வீகமாக கொண்ட இந்த குளவிகள், ஆறரை சென்டி மீட்டர் வரை வளரக்கூடியது.

வாஷிங்டன் மாநிலத்தில் கனடா எல்லைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ள பெரிய குளவி, தேனீக்களை தாக்கிவிட்டு அதன் கூடுகளை ஆக்கிரமிக்க வல்லது என்பதால் தேனீ வளர்ப்புத் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இது மனிதர்களை கடிக்கும்போது ரத்த ஓட்டத்துடன் விஷம் கலந்து உறுப்புகளை பாதிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments