கொரோனாவால் அமெரிக்காவில் ஒரேநாளில் 2,500 பேர் உயிரிழப்பு

0 1108
கொரோனாவால் அமெரிக்காவில் ஒரேநாளில் 2,500 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்திருப்பதால் அங்கு, பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்ததால் அமெரிக்காவில் கொரேனாவால் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நோய்த்தொற்று காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் போல்சோனாராவின் செய்தித் தொடர்பாளர் ஓட்டாவியா பாரோஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

வைரஸ் தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று அந்நாட்டரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இத்தாலியில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நோய்த் தொற்றின் மரண விகிதாச்சாரம் மீண்டும் அதிகரித்திருப்பது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வாடிகனில் உள்ள போப் பிரான்சிஸ் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு ஊழியருககு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வருவதால் ஸ்பெயினில் 4வது முறையாக ஊரடங்கை நீட்டிப்பு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.நாள்தோறும் 10 ஆயிரம் பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்படும் ரஷ்யாவில் அடுத்த வாரம் முதல் தளர்வுகளை அறிவிக்க அதிபர் புதின் முடிவு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments