வெளிநாடுகளில் இருந்து 64 சிறப்பு விமானங்களில் இந்தியர்களை அழைத்துவர ஏற்பாடு...

0 3861

அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள 14ஆயிரத்து 800 இந்தியர்கள், 64 விமானங்களில் அழைத்து வரப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நாளை முதல் 13ம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் ஏர் இந்தியா நிறுவனத்தின் 64 விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட இருப்பதாக தெரிவித்தார்.

எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என்ற பட்டியலை வெளியிட்ட அவர், விமானங்களில் திரும்பி வருவோர் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இதற்காக குறிப்பிட்ட கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதன்படி லண்டனில் இருந்து மும்பை, பெங்களூரூ, டெல்லி வருவதற்கு 50 ஆயிரம் ரூபாயும், சிகாகோவில் இருந்து டெல்லி, அகமதாபாத், பெங்களூரு வர ஒரு லட்சம் ரூபாயும், டாக்காவில் இருந்து டெல்லிக்கு 12 ஆயிரம் ரூபாயும், வசூலிக்கப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments