காட்டுத்தீ போல பரவும் கொரோனா.. உயரும் உயிர்ப்பலி..!

0 6012

இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது. கொரோனா உயிரிழப்பு, 165 - ஐ எட்டி உள்ளது. மும்பை மாநகரில் மட்டும் ஒரேநாளில், 106 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது.

காட்டுத்தீ போல, இந்தியாவில் கொரோனா, அதி வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

மஹாராஷ்டிராவில், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் ஒரே நாளில் 106 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், அந்நகரில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்தது. மஹாராஷ்டிரா முழுவதும் கொரோனாவுக்கு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 135 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 738.

டெல்லியில் 576 பேரும், தெலங்கானாவில் 453 பேரும், கேரளாவில் 345 பேரும், உத்தரபிரதேசத்தில் 343 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான் - 328 , ஆந்திரா - 305 , மத்திய பிரதேசம் - 229 , கர்நாடகா - 181 மற்றும் குஜராத்தில் 186 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஹரியானா - 147 , ஜம்மு - காஷ்மீர் - 130 , பஞ்சாப் - 106 மற்றும் மேற்கு வங்காளத்தில் 99
பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆக மொத்தம், நாடு முழுவதும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, கொரோனாவுக்கு பலியானோர்
எண்ணிக்கை 165 -ஐ எட்டி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments