கொரோனா வைரசை அழிக்குமா இவர்மெக்டின்?

0 34029

இவர்மெக்டின் எனப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து கொரோனா வைரசை அழிக்கக் கூடியது என மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஆன்டிவைரல் ரிசர்ச் எனப்படும் இதழில் வெளியான அந்த ஆய்வறிக்கையில், இவர்மெக்டின் மருந்து செல்வளர்ப்பு முறையில் பல்கிப் பெருகி 48 மணி நேரத்தில் கொரோனா வைரசை அழித்துவிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த மருந்தை ஒரு முறை செலுத்தினாலே 24 மணி நேரத்தில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எச்ஐவி, டெங்கு, இன்புளூயன்சா, சிகா ஆகிய வைரஸ்களுக்கு எதிராகவும் இது சிறப்பாகச் செயல்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. எனினும் இதைப் பயன்படுத்தும்முன் மருத்துவமனைகளில் முறையாகச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிய ஆஸ்திரேலிய மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments