முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை

0 1512

கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு உட்பட 10 மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

தலைநகர் டெல்லியில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்தவாறு, வீடியோ கான்பரன்சிங் மூலம், காலை 11 மணியளவில், முதலமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கேரளா, ஆந்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, அசாம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு முதலமைச்சருடனும், தலா 3 நிமிடம் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது, அந்தந்த மாநிலங்களின் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் தற்போதையை நிலைமை குறித்த அறிக்கையை முதலமைச்சர்கள் தாக்கல் செய்வர்.

இந்த ஆலோசனையில், ஒவ்வொரு மாநில முதலமைச்சருடன், சுகாதாரத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments