எல்லோருக்கும் மாஸ்க் தேவையில்லை - WHO

0 5877

கொரோனா அறிகுறிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்கள் அல்லது கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கவனித்துக் கொள்ளும் நபர்கள் தவிர மற்றவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்கள் முக கவசம் அணிவதால் பயன் கிடைக்கும் என்பதற்கான எந்த குறிப்பிடத்தக்க ஆதாரமும் இல்லை என்று, உலக சுகாதார நிறுவன செயல் இயக்குநர் மைக் ரையான் (Mike Ryan) ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதே நேரம் முக கவசங்களை தவறாகவோ, சரியான முறையிலோ பயன்படுத்தவில்லை என்றால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

இப்போது சர்வதேச அளவில் முக கவசங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதை சுட்டிக்காட்டிய அவர், கொரோனா நோயாளிகளை கையாளும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான அளவில் முக கவசம் கிடைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற அச்சத்தையும் வெளியிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments