கன்னியாகுமரியில் உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை -சுகாதாரத்துறை தகவல்

0 3306

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த மூவரது தொண்டை மற்றும் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், பரிசோதனையில் மூவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments