உலக நாடுகளின் தலைவர்களை உலுக்கியெடுக்கும் கொரோனா

0 2312

உலக மக்களை உலுக்கியெடுத்துள்ள கொரோனா வைரஸ்,  பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

image

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் விரிவடைந்துள்ளது. இந்தக் கொடிய தாக்குதலுக்கு முதலில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டான். கடந்த 13ம் தேதி இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து பரவிய பீதியால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், துணை அதிபர் மைக் பென்சும் கொரோனா சோதனை செய்து கொண்டனர்.

image

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலும் தனக்குத் தானே சுயக் கட்டுப்பாடுடன் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில்தான் கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் மனைவி சோபியா கிரகோரி தொற்று நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

image

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லேசான கொரோனா அறிகுறிகள் தென்பட்டன. அவருக்கு பரிசோதனை செய்ததில் தற்போது தொற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர், தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், காணொலி மூலம் அரசு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ட்விட்டரில் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹேன்காக்கிற்கு (Matt Hancock) கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு பணிகளைச் செய்து வருவதாக அவரும் டிவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

image

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியின் எம்.பி. ஜோ கன்னிங்ஹம்முக்கும் (Joe Cunningham) கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரானில் துணை அதிபர் ஜஹாங்கிரி, அமைச்சர்கள் அலி அஸ்கார் மற்றும் ரெஸா ரஹ்மானியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூமான்ஜி படத்தின் கதாநாயகி லாரா பெல்பண்டி க்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளதாக அவரே கூறியுள்ளார்.

image

இதனிடையே தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹாலிவுட் நடிகர் மார்க் பிளம் (Mark Blum) நேற்று உயிரிழந்தார். இவர் Blind Date, Step Up 3D உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments