சென்னையில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

0 11993

தமிழகத்தில் இன்று மேலும் மூவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏற்கனவே 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து சேலம் சென்ற 4 இந்தோனேசியர்கள், அவர்களது பயண வழிகாட்டி, நியூசிலாந்து மற்றும் லண்டனில் இருந்து திரும்பிய இருவர் மற்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நபரோடு தொடர்பில் இருந்த 18 வயது இளைஞர், துபாயில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைக்குத் திரும்பிய 65 வயது முதியவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சுற்றி வந்த தாய்லாந்து நாட்டினரோடு தொடர்பில் இருந்த 66 வயது முதியவர் ஆகியோருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். துபாயில் பணியாற்றும் ஈரோடு இளைஞரான அவர் கடந்த 22-ஆம் தேதி துபாய் - திருச்சி விமானத்தில் வந்தார்.

விமான நிலைய சோதனையில் அவருக்கு பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா உறுதிப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மேலும் இருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. லண்டனில் இருந்து திரும்பிய சைதாப்பேட்டையைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது மூதாட்டிக்கு பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments