கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18,600

0 905

ஸ்பெயினில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 4 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 2 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே நாளில் 680 பேர் வரை பலியாகி உள்ளது அங்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மாட்ரிட்டில் முதியோர் இல்லங்களில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள ராணுவத்தினர் அனுப்பப்பட்டிருந்த நிலையில், ஆங்காங்கு வயோதிகர்கள் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. மேலும் சில குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் இறந்த வயோதிகர்களை அப்படியே விட்டுவிட்டு வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 600ஐக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 294 பேர் பலியாகி உள்ளனர். தொற்று நோயால் இதுவரை 4 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments