ஜி 20 நாடுகளின் தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை

0 937

ஜி 20 நாடுகளின் தலைவர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நாளை நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் உள்ளிட்ட தலைவர்களுடன் இந்த மாநாட்டின் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

கோவிட் 19 என்ற கொடிய நோய் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஜி 20 மாநாடு நடைபெறும் என ஜி 20 கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கும் சவூதி அரேபிய இளவரசர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போதும் நாளை மாலை காணொலி மூலம் மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 2022ம் ஆண்டு ஜி 20 கூட்டமைப்பின் தலைமையை இந்தியா ஏற்க உள்ளது. இதனிடையே ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லெயன் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments