ஊரடங்கினை பொருட்படுத்தாத மக்கள் - ஆதரவு அளித்த இளைஞர்கள்

0 3089

மக்கள் ஊரடங்கின் போது சில இடங்களில் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்த நிலையில், வேறு சில இடங்களில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு இளைஞர்கள்  உணவு அளித்தனர்.

திண்டுக்கல்லில் ஊரடங்கினை மீறி நகரில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் வடமாநில ஊழியர்களுடன் இயங்கி வந்த, பைப் நிறுவனத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் செயல்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு வந்த அதிகாரிகள் ஆலைக்கான மின் இணைப்பையும் துண்டித்து சென்றனர்.

கரூரில் சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு, இளைஞர்கள் சிலர் தாங்களே சமைத்து உணவளித்து உதவினர். ஊரடங்கால் அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் இணைந்த கைகள் என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், தேவைப்படுபவர்களை தேடிச் சென்று 3 வேலை உணவையும் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments