நாளை காலை வரை ஊரடங்கு நீட்டிப்பு

0 17446

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, கொரோனா பரவுவதை தடுக்க காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமகவே முன் வந்து ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு இந்த ஊரடங்கு நிறைவடைய இருந்தது. இந்நிலையில், மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை, இந்த ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மக்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் அத்தியாவசியப்பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தொடர் ஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments