தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

0 64293

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. ஓமனில் இருந்து திரும்பிய காஞ்சிபுரம் பொறியாளர், டெல்லி சென்று திரும்பிய 20 வயது இளைஞர், அயர்லாந்தில் இருந்து வந்த 21 வயது மாணவர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தமிழகம் வந்திருந்த 2 தாய்லாந்து நாட்டவர்கள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து திரும்பிய ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த பயணி ஒருவருக்கு இன்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த 7 பேரில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று குணமாகி வீடு திரும்பி விட்டார். மற்ற 6 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட 7 பேரில் 6 பேர் வெளிநாடுகளில் இருந்தும், ஒருவர் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments