வீட்டில் இருப்பது மட்டுமல்ல, அவரவர் வசிக்கும் ஊரிலேயே இருப்பதும் முக்கியம் - பிரதமர் மோடி

0 59621

வீட்டில் இருப்பது மட்டுமல்ல, அவரவர் வசிக்கும் ஊர் அல்லது நகரத்திலேயே இருப்பதும் முக்கியம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

தேவையற்ற பயணங்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கோ அல்லது பிறருக்கோ எவ்வகையிலும் உதவாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா குறித்து மருத்துவர்களும், அதிகாரிகளும் கூறும் ஆலோசனைகளை அனைவரும் கேட்டு நடக்க வேண்டும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும், இது உங்களையும், குடும்பத்தினரையும் நண்பர்களையும் காக்க உதவும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதுபோன்ற நேரங்களில், ஒரு சிறிய முயற்சி கூட, பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ட்விட்டர் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.

லட்சக் கணக்கான தனியார் காவலாளிகள், பணம் நிரப்பும் குழுவினர், துப்புரவு பணியாளர்கள், கிருமிநாசினி தெளிப்பவர்கள் போன்ற பணியாளர்கள் ஹீரோக்கள் என்றும், அவர்களது சேவை என்றென்றும் நினைவுகூறப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments