'GO GO கொரோனா' கலக்கல் விழிப்புணர்வு கானா ..!

0 1449

கொரோனாவை விட, வதந்திகள்அதி வேகமாக பரவுவதால், கானா பாடல் மூலம் வட சென்னை கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நல்ல பல கருத்துக்களை மிக எளிமையாக மக்களுக்கு கொண்டு செல்லும் இந்த கானா விழிப்புணர்வு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கொடுந்தொற்று கொரானா பாதிப்பை தடுக்க மத்திய - மாநில அரசுகள், ஆக்கப்பூர்வமான பணிகளை ஒருபக்கம் முடுக்கி விட, மற்றொருபக்கம் கல்லூரி மாணவர்களும் தீவிர விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

கல்லூரி மாணவர்களின் இந்த கானா பாடல்களை, சென்னை மாநகர மக்கள் கேட்டு, வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர். சமூகவலைதளங்களிலும் வாட்ஸ்ஆப்களிலும் பரவும் கொரோனா குறித்த வதந்திகளே தம்மை இதுபோன்ற பாடலை எழுத தூண்டியதாக கூறுகிறார் மாணவர் இசக்கி..

கொரோனா, ஒரு சாதாரண வைரஸ் தொற்று அல்ல என்பதை நெத்தி அடியாக பதிவு செய்யும் இந்த கானா பாடல், பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் முதியவர்கள் வரை,அனைத்து தரப்பினருக்கும் இது எச்சரிக்கை மணி . தேவை இல்லாமல் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல நல்ல கருத்துக்களை, கானாவுக்கே உரித்தான குரலில் பாடி அசத்துகிறார், மாணவர் பிரசாத்.

கானாவில் கொரோனா அறிகுறிகளை வரிசைக்கட்டும் இவர்கள், அரசின் அறிவுறுத்தல்களை உதாசினப்படுத்தக்கூடாது என பாடியே எச்சரிக்கின்றனர். சொல்ல வேண்டிய கருத்துக்களை, மக்களிடம் மிக எளிமையாக கொண்டு செல்கிறது, விழிப்புணர்வு கானா பாடல்கள்.

பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டும் தான் இருக்கிறதா ? தங்களுக்கும் அந்த கடைமை இருக்கிறது என காலரை தூக்கி விட்டு, உற்சாகமாக பாடுகின்றனர் இந்த வடசென்னை இளைஞர்கள் ..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments