தொற்று நோய் குறித்த உத்தரவில் அலட்சியம் காட்டியதாக பிரபல பின்னணிப் பாடகி மீது வழக்கு

0 2823

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி கனிகா கபூர் மீது, தொற்று நோய் குறித்த உத்தரவுகளை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த  15ஆம் லண்டனில் இருந்து திரும்பிய அவர், லக்னோவில் ஐந்து நட்சத்திர விடுதியில் அவர் நடத்திய விருந்தில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, அவர் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து வசுந்தராவும் துஷ்யந்தும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதையடுத்து லக்னோ நகர தலைமை மருத்துவ அதிகாரி அளித்த புகாரின் பேரில், அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாக லக்னோ நகர காவல் ஆணையர் சுஜித் பாண்டே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments