கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சானிட்டைசர்கள் விலை

0 2366

கொரோனா வைரஸ் காலத்தில் கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதற்கு சானிட்டைசர்கள் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை 500 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் விலையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு 200 மில்லிலிட்டர் சானிட்டைசரை 100 ரூபாய்க்கு மேல் விற்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிளிப்கார்ட் உள்ளிட்ட இணைய வர்த்தகத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சமூக ஊடகங்களில் புகார்களை அறிந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் விலைக் கட்டுப்பாட்டை அறிவித்துள்ளார்.

இதே போல் முகக் கவசங்களை பத்து ரூபாய்க்கு மேல் விற்கக் கூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைக்காரர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments