கொரோனா அச்சம் : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0 10264

கொரோனா பாதிப்பு நீங்கும் வரை, தமிழகத்தில் போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும்,  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போராட்டத்திற்கு ஆதரவாக மனு தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர்கள், ஜனநாயக அமைப்பில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதிகள், கொரோனா அச்சம் காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க, அரசு அறிவுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்டினர். எனவே, கொரோனா பாதிப்பு நீங்கும் வரை, போராட்டங்களோ அல்லது பேரணிகளோ நடத்த  அனுமதி கொடுக்க கூடாது என  உத்தரவிட்ட நீதிபதிகள், பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 21 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments