இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி கனிகா கபூருக்குக் கொரோனா பாதிப்பு

0 1251

பாலிவுட் பின்னணிப் பாடகி கனிகா கபூருக்குக் கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதால், அவருடன் விருந்தில் பங்கேற்ற வசுந்தரா ராஜே, துஷ்யந்த் ஆகியோர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகி கனிகா கபூர் லண்டன் சென்றுவிட்டு விமானத்தில் மார்ச் 15ஆம் தேதி லக்னோவுக்கு வந்தார்.

வெளிநாடு சென்று திரும்பியவுடன் லக்னோவில் ஐந்து நட்சத்திர விடுதியில் அவர் நடத்திய விருந்தில் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, அவர் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வசுந்தராவும் துஷ்யந்தும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments