செயின் பறிப்பில் ஈடுபட்டதாக முன்னாள் காவலர் கைது

0 641

சென்னை ஆவடி சுற்றுவட்டாரங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக சிறப்பு காவல் படை முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார்.

ஆவடியில் கடந்த 16ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், சாலையில் சென்று கொண்டிருந்த கற்பகம் என்பவரிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இது போல் சுற்றுவட்டாரங்களில் பல இடங்களில் நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் சிறப்பு காவல் படை முன்னாள் காவலர் சதீஷை கைது செய்தனர்.

ஆவடி, திருமுல்லைவாயிலில் சதீஷ் பல்சர் பைக் மூலம் தொடர் வழிப்பறிப்பில் ஈடுபட்டு போலீசுக்கு தண்ணிகாட்டி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 51 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், சதீஷின் கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments