கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - இலங்கையில் ஊரடங்கு உத்தரவு

0 3272

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவிப்பில், நாடு முழுவதிலுமான காவல்துறை ஊரடங்கு இன்று மாலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்தில் பொதுப் போக்குவரத்தும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், கட்டுநாயகே விமான நிலையம் செல்வோருக்கு விமான டிக்கெட் பெர்மிட்டாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments