மின்னஞ்சலை பயன்படுத்தி குருப் 2 தேர்வில் ரூ.27 லட்சம் மோசடியில் 2 பேர் மீது புகார்

0 283

டிஎன்பிஎஸ்சி மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி குரூப் 2 தேர்வில் 27 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக துணை செயலாளர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற அதிகாரி உள்ளிட்ட இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த மதுரூபன் 2018 ஆம் ஆண்டு குரூப் 2 தேர்வு எழுதிவிட்டு, முடிவுக்கு காத்திருந்தபோது டிஎன்பிஎஸ்சியின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அவருடைய பதிவு எண் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. பின்னர் டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் பதவியிலிருந்து ஒய்வு பெற்ற அதிகாரி உட்பட இருவர் தொடர்புக் கொண்டு லஞ்சமாக பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து 27 லட்சம் ரூபாயை சில தவணைகளாக அவரின் தந்தை கொடுத்தும், பல மாதங்களாகியும் பணி குறித்த அறிவிப்பு வராததால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து கேணிகரை காவல்நிலையத்தில் மதுரூபனின் தந்தை நேற்று புகார் அளித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments