கொரோனாவை கட்டுப்படுத்த சீனா, தென்கொரியா நாடுகள் என்ன செய்தன.?

0 3797

பல்வேறு உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் சற்றும் குறையாத நிலையில், இந்த உயிர்கொல்லிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,900-த்தை தாண்டியுள்ளது. கொரோனாவின் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவிலும் சரி, விரைவாக பரவி அச்சுறுத்திய தென்கொரியாவிலும் சரி தற்போது கொரோனா முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3 பேரை கொரோனா கொன்றுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மேதாந்தா (Medanta) மருத்துவமனையின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான நரேஷ் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது பற்றி கூறியுள்ளார்.

கண்ணுக்குத் தெரியாத எதிரிக்கு எதிராகப் போரிடுவது போன்றது தான் கொரோனாவிற்கு எதிராக போராடுவது. அதன் பரவலை தடுத்து நிறுத்துவதே இலக்காக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கொரோனா தாக்கிய வெளிநாட்டினருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மூலம் என்ன மாதிரியான அனுபவங்கள் கிடைத்துள்ளன. அதிலிருந்து கற்று கொண்டவை என்ன என்பது பற்றியும் கூறியுள்ளார் நரேஷ்.

image

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலும் தனிமைப்படுத்தும் வசதி எங்கள் மருத்துவமனையில் இருக்கிறது. எனினும் வைரஸ் பரவி விடாமல் தடுப்பது மிக பெரிய சவாலான பணியே. பாதிக்கப்பட்டவர்களுக்கென மருத்துவமனையில் பிரத்யேக பகுதிகளை அர்ப்பணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. தனி லிஃப்ட், தனி சமையலறை, தனி கழிவறைகள் என அனைத்தையும் தனியே தயார் செய்துள்ளோம்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை வேறு வேறு மருத்துவமனைகளில் வைத்து பராமரிப்பது என்பது மிகவும் ஆபத்தானதே. ஏனென்றால் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு விரைவாக பரவ கூடும். அதுவே ஒரே இடத்தில் 500 நோயாளிகளை பராமரிக்க கூடிய வசதி இருந்தால் கடினமான சூழலை கூட நன்றாக கையாள முடியும்.

ஏனென்றால் பராமரிப்பாளர்களைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதை பற்றியும் மருத்துவமனை கவலைப்பட வேண்டியதில்லை. கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் இந்த முறையை பின்பற்றி விரைவாக நோயாளிகளை தனிமைப்படுத்தியதால் தான், காட்டு தீ போல கட்டுக்கடங்காமல் பரவிய கொரோனவை, ஒரு சில வாரங்களிலேயே கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன என கூறியுள்ளார் நரேஷ்.

H1N1 தொற்றுநோய் தாக்கிய காலகட்டத்தில் நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அதை எதிர்கொண்டோம், அந்த தொற்றால் ஏற்பட்ட இறப்பு 2% மட்டுமே. அது ஒரு பெரிய பேரழிவு அல்ல. அந்த சமயத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஹவுஸ்கீப்பிங் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது முழு பங்களிப்பை வழங்கினர்.

image

ஒருவேளை நம் நாட்டில் கொரோனாவின் தாக்கம் எதிர்பாராதவிதமாக அதிகரித்தால், மருத்துவ துறையில் உள்ள அனைவரும் முழுவீச்சில் சேவை புரிய தயாராகவே உள்ளனர் என்றார். கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள், கிளப்புகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், சினிமா அரங்குகள் உள்ளிட்டவற்றை மூட அறிவுறுத்தி அரசாங்கம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

image

இதனால் பல மட்டத்தில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டாலும், இதை செய்யாமல் விட்டு விட்டால் வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி ஆயிரக்கணக்கான மக்களை தாக்கி அதனால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டார்.

அதே போல பீதியில் தங்களையும் சோதிக்க வேண்டும் என்று கூறும் நபர்களால், உண்மையில் பாதிக்கப்பட்டவருக்கு தகுந்த சமயத்தில் பரிசோதனைகள் செய்ய இயலாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார் மேதாந்தா மருத்துவமனை இயக்குனரான நரேஷ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments