கொரோனா பாதிப்பால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி

0 1411

கொரோனா தாக்கத்தால் வீழ்ச்சியை சந்தித்துள்ள கச்சா எண்ணெய் விலை இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. 

அமெரிக்க கச்சா எண்ணெயின்  விலை கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 30 டாலருக்கும் கீழே சென்று விட்டது.  அதே போன்று பிரென்ட் கச்சா எண்ணெய் (Brent crude )விலையும் பேரலுக்கு 30 புள்ளி 96 டாலராக குறைந்துள்ளது. இதனிடையே இந்த விலைக்குறைவை பயன்படுத்தி நாட்டின் முக்கிய எண்ணெய் கிடங்குகளை நிரப்புமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அவசரத் தேவைக்கான இருப்பையும் அதிகரிக்குமாறு உத்தரவிட்டுள்ள அவர், மின் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த விலையில் அதை விநியோகிக்கவும் அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சவூதி அராம்கோ நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரித்ததுடன் விலையையும் குறைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments