தவறான வழி சென்ற மனைவி...தற்கொலை செய்துகொண்ட கணவன்...

0 25620

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மனைவியின் தவறான நடவடிக்கையால் மனமுடைந்த கணவன், மனைவியின் தவறான தொடர்பு குறித்து ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஆறுமுகநேரியைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநரான மகேஷ், கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியைப் பிரிந்து 2வதாக அருணா என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மகேஷ் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னதாக அவர் பேசி வெளியிட்டுள்ள ஆடியோவில் மனைவி அருணாவும் தனது நண்பன் ரதனும் தகாத உறவில் இருப்பதாகவும் அதனை கண்டித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ரதன் - அருணாவின் தவறான உறவு தொடர்பாக தாம் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகாரளிக்கச் சென்றதாகவும் ஆனால் உண்மையை அறியாமல் போலீசார் தன்னை அடித்ததாகவும் மற்றொரு ஆடியோவில் கூறியுள்ள மகேஷ், தனது மனைவி மீதும் ரதன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் குழந்தைகள் இருவரையும் தனது தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆடியோவில் அவர் கூறியுள்ளார். (( GFX OUT ))

தற்கொலைக்கு முந்தைய மகேஷின் இந்த ஆடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மகேஷின் இந்த ஆடியோ குற்றச்சாட்டு குறித்து ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் விளக்கம் கேட்க முற்பட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments