ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு

0 767

ஆபரணத்தின் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் 264 ரூபாய் உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் அச்சம் காரணமாக தங்கம் மீது முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களினால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் மீதான விலை உயர்ந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 181 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று 33 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 214ஆக உள்ளது.

நேற்று 33 ஆயிரத்து 448 ரூபாயாக இருந்த சவரன் தங்கம் விலை இன்று 264 ரூபாய் உயர்ந்து 33 ஆயிரத்து 712 ரூபாயாக உள்ளது.

நேற்று 49 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 800 ரூபாய் உயர்ந்து, 50 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments