தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரானா பாதிப்பு இல்லை - விஜயபாஸ்கர்

0 1596

கொரானா பாதித்த காஞ்சிபுரம் பொறியாளரோடு பழகிய 7 பேர் உள்ளிட்ட 8 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை முடிவில் உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஓமனில் இருந்து தாயகம் திரும்பிய, காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியாளருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் பழகிய 7 பேர் உள்ளிட்ட 8 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில், அவர்கள் யாருக்கும் கொரானா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதனிடையே சென்னையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஒருவரை தவிர வேறு யாருக்கும் கொரானா பாதிப்பு இல்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments