திருமணமான பெண்ணை புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டிய நபர்

0 1769

திருமணமான பெண்ணை புகைப்படம் எடுத்து வைத்து, ஆபாசமாக சித்தரித்துவிடுவதாகக் கூறி திருமணம் செய்ய வற்புறுத்திய நபர் கோவையில் கைது செய்யப்பட்டான்.

உப்பிலியாப்பாளையத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் சென்னையில் பணிபுரிந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவன் பழக்கமாகியுள்ளான். அந்த பழக்கத்தில் அவனோடு அந்தப் பெண் அருகே நின்று சில புகைப்படங்களையும் எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கணவரை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்திய ராஜா, சம்மதிக்காவிட்டால் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என மிரட்டியதாகக் கூறுகிறார் அந்தப் பெண். அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜா பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments